இளைஞர்கள் போராட்ட வழக்கு - 15 பேர் விடுதலை

இளைஞர்கள் போராட்ட வழக்கு - 15 பேர் விடுதலை

கடந்த 2018 ஏப்ரல் மாதம் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள மாணவர் சாலையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றக் கோரிக்கைகளை  வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் மாணவர்கள்,  இளைஞர்கள் தன்னெழுச்சியாக கூடி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு 8 நாள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு ஜாமின் பெற்று வெளியே வந்து வழக்கு தொடர்ந்து முன்னெடுத்து நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் (22.2.2023) இன்று திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் சார்பாக கைது செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் தொடர்ந்து வாதாடி வழக்கை வெற்றி பெற்ற வைத்த

வழக்கறிஞர் ப.முருகானந்தம் மற்றும் எம்.செல்வகுமார், சதாம் உசேன், ஏ.சுகன்யா மேரி, ஜி.ஸ்டீபன் ஆனந்த், ஆர்.பிரகாஷ், ஆ.வடிவேலு, செல்வம், கனிமொழி, மனோஜ் குமார், நடராஜன் உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn