கஞ்சா கடத்திய 2 பேர் கைது; 36 கிலோ கஞ்சா பறிமுதல் - ஸ்ரீரங்கம் போலீசார் அதிரடி

கஞ்சா கடத்திய 2 பேர் கைது; 36 கிலோ கஞ்சா பறிமுதல் - ஸ்ரீரங்கம் போலீசார் அதிரடி

திருச்சியில் கஞ்சா கடத்தி 2 பேரை போலீசார் கைது செய்து 36 கிலோ கஞ்சா மற்றும் அவர்கள் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பவர்களை போலீசார் கைது செய்து பிடித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஆந்திராவில் இருந்து திருச்சி வழியாக கஞ்சா கடத்த்தப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

இதையடுத்து போலீசார் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதியில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்து வந்தனர். அங்கு வந்த ஒரு காரில் 36 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காரில் இருந்த கம்பத்தை சேர்ந்த சந்திரசேகர் (38) தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (33) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.