மாத சம்பளம் 2 லட்சம் - இங்கிலாந்து நாட்டில் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!!

மாத சம்பளம் 2 லட்சம்  - இங்கிலாந்து நாட்டில் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் (National Health services) பணிபுரிய குறைந்தபட்ச 6 மாத அனுபவம் உள்ள Diploma அல்லது B.Sc Degree பயின்ற (ஆண் மற்றும் பெண்) செவிலியர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். மேற்காணும் பணிக்கு IELTS (International English Language Testing System) (Band 7.0) அல்லது OET (Occupational English Test) (Grade-B) பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் வர்களுக்கு ரூ.2,00,000/- முதல் ரூ.2,50,000/- வரை மாதச் சம்பளம், இலவச விசா, விமான டிக்கெட் மற்றும் இங்கிலாந்து நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.

மேலும் IELTS-ல் 6 முதல் 6.5 வரை மற்றும் OET- ல் C முதல் C+ வரை தேர்ச்சி பெற்ற செவிலியர்களுக்கு இலவச IELTS/OET பயிற்சி அளித்து இங்கிலாந்து நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில்(National Health Services) வேலைவாய்ப்பினை இந்நிறுவனம் பெற்றுத் தர உள்ளது.

Advertisement

IELTS மற்றும் OET இலவச பயிற்சி பயில விரும்பும் செவிலியர்களுக்கான முதல் நிலை தேர்வு 29.10.2020 அன்று நடைபெற உள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, IELTS அல்லது OET தேர்வின் சான்றிதழ் மற்றும் செல்லத்தக்க பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omcluk2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களை ‌அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் www.omcmanpower.com வாயிலாகவும் மற்றும் 044-22505886/ 22502267 /9566239685/8610334355 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.

இந்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் எண். Rc.no. B-0821/CHENNAI/CORPN/1000+

/5/308/84 ஆகும் என அரசு முதன்மை செயலாளர் செய்தி வெளியிட்டுள்ளார்.