ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்!!

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்!!

தமிழகத்தின் பாரம்பரிய மிக்க விளையாட்டு. பல தடைகளைத் தாண்டி பாரம்பரியத்தை காக்க அனைவரும் ஒன்று கூடி பாதுகாத்த விளையாட்டு ஜல்லிக்கட்டு. இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டிகள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல பகுதிகளில் நடக்கவில்லை.
இதனால் ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில்,ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் மாநில தலைவர் இலங்கை அமைச்சர் M.செந்தில் தொண்டமான், மாநில செயலாளர் T.ஒண்டிராஜ் அவர்களின் அறிவுறுத்துதலின் படி புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சாவூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மாடு பிடி வீரர்கள் மற்றும் காளை வளர்போர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் அந்தந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு நல சங்கத்தின் நிர்வாகிகள்   முன்னிலையில் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.