சீனாவில் இருந்து வந்த ரேபிட் டெஸ்ட் கருவி திருச்சிக்கு வந்தது!!

சீனாவில் இருந்து வந்த ரேபிட் டெஸ்ட் கருவி திருச்சிக்கு வந்தது!!

தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்வது சேலம் மற்றும் சென்னையில் துவங்கிய நிலையில் தற்சமயம் திருச்சிக்கும் வந்துள்ளது.

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை தமிழக அரசு சீனாவில் இருந்து கொள்முதல் செய்தது. இதில், முதல்கட்டமாக 24 ஆயிரம் கருவிகள் நேற்று சென்னை வந்தன. இதில் ஆயிரம் கருவிகள் சேலம் வந்தடைந்தது. இதனையடுத்து சேலத்தில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் பணி துவங்கியது. இந்த பரிசோதனை மூலம், அரை மணிநேரத்தில் முடிவுகள் கிடைக்கும்.

இந்நிலையில் சற்று நேரத்துக்கு முன் திருச்சி அரசு மருத்துவமனையில் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட 15 பேருக்கு கோவிட்19 தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்தார்.

இதில் மருத்துவ பணியாளர்கள் சுகாதார ஆய்வாளர்கள்,காவல் உதவி ஆணையர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.