திருச்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், மாறுதல்கள் செய்ய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள்

திருச்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், மாறுதல்கள் செய்ய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2022-ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும் 2022 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் 01.11.2021 முதல் நடைபெற்று வருகிறது. 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 13.11.2021, 14.11.2021 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையமானது 
வருகின்ற 20.11.2021 சனி மற்றும் 21.11.2021 ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க & நீக்கம் செய்ய & மாறுதல்கள் செய்ய கூடுதலாக சிறப்பு முகாம்கள் 
நடத்திட ஆணையிட்டுள்ளது. மேலும், முன்னதாக அறிவித்தபடி 27.11.2021 மற்றும் 28.11.2021 ஆகிய தேதிகளிலும் 
அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. 01.01.2022 அன்று 18 வயது நிரம்பியவர்கள் (அதாவது, 31.12.2003 அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து வயது மற்றும் 
இருப்பிடத்திற்குரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.

அயல்நாடு வாழ் வாக்காளர்கள் படிவம் 6A-இல் நேரடியாக வாக்காளர் பதிவு அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளரது பெயரினை நீக்கம் செய்திட படிவம்-7-னையும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் படிவம் 8-னையும், சட்டப் பேரவைத் தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய இடத்தில் வசிப்பவர்கள் படிவம் 8ஏ-னையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விண்ணப்பங்கள் 01.11.2021 முதல் 30.11.2021 வரை அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், (சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் உட்பட) வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் 
அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் அலுவலகங்களில் உரிய படிவத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 
பகுதிக்குட்பட்டவர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைக் கொடுக்கலாம்.
20.11.2021மற்றும் 21.11.2021 ஆகிய தேதிகளில் சம்மந்தப்பட்ட வாக்குசாவடி மையங்களில் நடைபெறும் கூடுதல் சிறப்பு முகாமிலும் மேலும் 27.11.2021மற்றும் 28.11.2021 ஆகிய தேதிகளில் சம்மந்தப்பட்ட வாக்குசாவடி மைய்யங்களில் நடைபெறும் சிறப்பு முகாமிலும் வாக்காளர் 
பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள றறற.nஎளி.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

எனவே 2022-ஆம் ஆண்டிற்குரிய சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் போது தகுதியான வாக்காளா்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பித்து இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn