துணை முதலமைச்சரை வழியனுப்ப வந்த கவுன்சிலர் உள்பட 2 பேர் படுகாயம்

துணை முதலமைச்சரை வழியனுப்ப வந்த கவுன்சிலர் உள்பட 2 பேர் படுகாயம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடந்த சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு பெருந்திரளணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருச்சி வந்தார். நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு துணை முதல்-அமைச்சர் நேற்று இரவு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

அவரை வழியனுப்ப ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விமான நிலைய பகுதிக்கு வந்து இருந்தனர். அப்போது நவல்பட்டை சேர்ந்த கவுன்சிலர் பாலமுருகன் உள்பட 2 பேர் இருசக்கர வாகனத்தில் விமானநிலையம் வந்து விட்டு, மீண்டும் வீடு திரும்பினர். இந்த நிலையில் விமானநிலையத்துக்கு எதிரே வேகமாக வந்த கார் ஒன்று அவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கவுன்சிலர் பாலமுருகன் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் அந்த பகுதியினர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, 2 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision