துறையூர் அருகே 23 டன் நெல்  லாரியுடன் பறிமுதல் - உணவு கடத்தல் தடுப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

துறையூர் அருகே 23 டன் நெல்  லாரியுடன் பறிமுதல் - உணவு கடத்தல் தடுப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

திருச்சி மாவட்டம் துறையூர், எரகுடி, வைரிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உணவு பொருள்கள் கடத்தல் நடைபெறுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், உதவி ஆய்வாளர் அலாவுதீன் ஆகியோர்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது துறையூர் அருகே உள்ள எரகுடி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். லாரியில் 23 டன்  நெல் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. லாரி டிரைவர் சரவண ராஜாவிடம் விசாரணை செய்ததில் வடக்குபட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவருக்காக நெல் மூட்டைகள் கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கணபதிபுரம் பகுதியிலிருந்து உரிய அனுமதியின்றி மாவட்டம் விட்டு மாவட்டம் உணவுப் பொருள்கள் கடத்தல் நடைபெற்றதை அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடித்தனர். இதையடுத்து லாரியுடன் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் சரவணராஜா கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH