வடகிழக்கு பருவமழை புகார் மற்றும் உதவிகளுக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

வடகிழக்கு பருவமழை புகார் மற்றும் உதவிகளுக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை, ஊரக வளர்ச்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைதுறை ஆகிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 24-மணி நேர மாவட்ட கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

இக்கட்டுபாட்டு அறையின் 1077, மற்றும் 0431-2418995 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். 93840 56213 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் புகார் அனுப்பலாம். மேலும், வட்ட அலுலகங்களிலும் 24 மணி நேர கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

திருச்சி கிழக்கு - 0431-2711602, 9445461808

திருச்சி மேற்கு - 0431 2410410, 9445000602

திருவெறும்பூர் - 0431 2555542, 9790093270

ஸ்ரீரங்கம் - 0431 2230871, 9445000603

மணப்பாறை - 04332 260576, 9445000604

மருங்காபுரி- 04332 299381, 9840378255

லால்குடி - 0431 2541233, 9445000605

மண்ணச்சநல்லூர் - 0431 2561791, 9445000606

முசிறி - 04326 260226, 9445000607

துறையூர் - 04327 222393, 9445000609

தொட்டியம் - 04326 254409,9445000608

இந்த கட்டுப்பாட்டு அறைகளுக்கோ, அல்லது வட்டாட்சியர்களின் அலைபேசி எண்ணிற்கோ பொதுமக்கள் புயல், மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். தற்போது பரவாலாக மழை பெய்து வருவதால் ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குழந்தைகளை செல்லாத வண்ணம் கவனமாக இருக்குமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைவெள்ளம், நீர்நிலைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்களை முன்கூட்டியே எளிதாக பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கு வண்ணம் டி.என்.அலர்ட் (TN-ALERT -Mobile App) என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த TN- ALERT செயலியை 'Google Play Store" மற்றும் IOS App Store"-ல் இருந்து அனைவரும் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த செயலியின் மூலம் மழை, வெள்ளம் தொடர்பான புகார்கள் தெரிவித்தால் மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision