திருச்சியில் நேற்று (24.10.2021) இரவு இடி விழுந்ததில் 5 பேர் காயம் - அரசு மருத்துவமனையில் அனுமதி

திருச்சியில் நேற்று (24.10.2021) இரவு இடி விழுந்ததில் 5 பேர் காயம் - அரசு மருத்துவமனையில் அனுமதி

வடகிழக்கு பருவமழை நாளை (26.10.2021) தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் இரவு முழுவதும் மழை பெய்தது. இதில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா உட்பட்ட சின்னா ஆலம்பட்டி பகுதியில் வசித்து வரும் விவசாயி செல்வம் என்பவரது வீட்டில் நேற்று இரவு இடி விழுந்தது. வீட்டில் இருந்த செல்வம் மனைவி இந்திரா மற்றும் அவரது மகன் செல்வகுமார், உறவினர்களான தனம், ஆனந்த குமார் ஆகியோர் இடி தாக்கியதில் காயம் அடைந்தனர்.

இதனை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பலத்த சத்தத்துடன் இடி விழுந்ததில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் பொருட்கள் சேதம் அடைந்து, வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இடி விழுந்ததில் காயம் அடைந்த செல்வத்திற்கு செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn