திருச்சியில் 9 டி.எஸ்.பிகள் பணியிட மாற்றம்!

திருச்சியில் 9 டி.எஸ்.பிகள் பணியிட மாற்றம்!

தமிழ்நாடு காவல் துறையில் தொடர்ந்து பணியிட மாற்றங்கள், பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளில் காவல் உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக நேற்று டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் குறித்த ஆணை வெளியானது.

This image has an empty alt attribute; its file name is 201810072139370364_Transfer-11-police-sub-inspectors-in-Trichy_MEDVPF.jpg

திருச்சி சரகத்தில் 9 டி.எஸ்.பிகளை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி யாக இருந்த செந்தில்குமார், புதுக்கோட்டை டி.எஸ்.பி யாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டி.எஸ்.பி சிவசுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் டி.எஸ்.பி யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is IMG-20200727-WA0034-300x300.jpg
Advertisement

திருச்சி மாநகரம், பொன்மலை உதவி கமிஷனராக இருந்த பாலமுருகன், பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி யாக நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் டி.எஸ்.பியாக பணியாற்றிய கோபாலச்சந்திரன் திருச்சி மது விலக்கு பிரிவு டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி சிட்டி ociu டி.எஸ்.பியாக இருந்த சுந்தரமூர்த்தி, ஸ்ரீரங்கம் சட்டம்- ஒழுங்கு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீரங்கம் உதவி கமிஷனராக இருந்த மணிகண்டன், திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி யாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is FB_IMG_1596464661020-300x300.jpg
Advertisement

திருச்சி பயிற்சி மைய டி.எஸ்.பியாக இருந்த ராதாகிருஷ்ணன், லால்குடி டி.எஸ்.பி யாக பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல லால்குடி டி.எஸ்.பி யாக இருந்த ராஜசேகர், சிவகங்கை சமூக நீதி மனித உரிமை டி.எஸ்.பியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜீயபுரம் டி.எஸ்.பி யாக இருந்த கோகிலா, சென்னை சி.பி.சி.ஐ.டி தலைமையக சிறப்பு பிரிவு டி.எஸ்.பி யாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0