மருத்துவமனை வாசலில் அரச மரம் கிளை விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மருத்துவமனை வாசலில் அரச மரம் கிளை விழுந்து போக்குவரத்து பாதிப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வாயில் முன் இருந்த அரசமரம் பெரிய கிளை இன்று மாலை விழுந்தது. சுமார் 150 ஆண்டு கால பழமை வாய்ந்த அரச மரம் மரக்கிளை விழுந்தது. நல்லவேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

இதனால் மருத்துவமனை செல்லும் வழியில் விழுந்ததால் அதன் வழியாக யாரும் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விழுந்த அரச மரம் கிளையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision