திருச்சியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

திருச்சியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

திருச்சி மாநகர பகுதிகளில் தற்போது கழிவுநீர் புதை வடிகால் அமைக்கும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருவதால் ஏற்கனவே மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே மன்னார்புரத்திலிருந்து காஜாமலை செல்லும் சாலையில் கழிவுநீர் புதை வடிகால் குழாய் அதிக அழுத்தத்தின் காரணமாக மிகுந்த சத்தத்துடன் உடைப்பு ஏற்பட்டதுடன், கழிவுநீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.

அவ்வாறு பெருக்கெடுத்த ஓடிய கழிவு நீர் காஜாமலை, டிவிஎஸ் நகர் மற்றும் காலி மனைகளுக்குள் சென்றது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பின்னர் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக ஆறு போல ஓடிய கழிவுநீர் நின்றது. அதிக அழுத்தம் காரணமாக குழாய் வெடிப்பு ஏற்பட்டதால் சுமார் 100 அடி தூரத்திற்கு சாலைகள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டது.

கழிவுநீர் சென்றதால் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் செசில்ல முடியாமல் அவதி அடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டது போல அங்கு பெரிய சத்தம் ஏற்பட்டு தண்ணீர் பீச்சி அடித்ததாக அதனை நேரில் பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

மாநகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து செயல்பட்டு இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO