திருவரம்பூர் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை ஏஎஸ்பி தனிபடை அமைத்து கைது

திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பில் 2.600 கிகி கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஓய்வு பெற்ற பெல் ஊழியர் மகனை திருவெறும்பூர் ஏஎஸ்பி தனி படை போலீசார்கைது செய்ததோடு அவனிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பெனாவாத்திற்கு பெல் குடியிருப்பு பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன் அடிப்படையில் அரவிந்த் பெனாவாத் தனது தனிப்படை போலீசாரை அதிரடியாக பெல் குடியிருப்பு கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டை சோதனைசெய்யஉத்தரவிட்டார் அதனடிப்படையில் அரவிந்த் பெனவாத் தனிப்படையினர். பெல் டவுன்ஷிப் பகுதியில் உள்ள அந்த வீட்டை அதிரடியாக சோதனை செய்துள்ளனர்.
அப்பொழுது அந்த வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2. கிலோ 600 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற பெல் ஊழியரும் பெல் வளாகத்தில் உள்ள பள்ளியில் வேலை பார்த்து வரும் ஆசிரியை மகனுமான நரேஷ் ராஜு (26) என்பவனை கைது செய்தனர்.
மேலும் அவனது வீட்டில் இருந்து கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து பெல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அதன் அடிப்படையில் பெல் போலீசார் வழக்கு பதிவு செய்து நரேஷ்ராஜுவை திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
நரேஷ் ராஜீவ் மீது கடந்த 2021 டிசம்பர் மாதம் தோகூர் காவல் நிலையத்தில் நண்பர்களுடன் சேர்ந்து தோகூர் போலீசாரை வெட்ட முயன்றவன் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision