ஆளுநர் விவகாரத்தில் ஆளுநரை மாற்றுவது தவிர வேறு வழி இல்லை - காதர் மொய்தீன் பேட்டி

ஆளுநர் விவகாரத்தில் ஆளுநரை மாற்றுவது தவிர வேறு வழி இல்லை - காதர் மொய்தீன் பேட்டி

ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள் கொதித்துப் போய் உள்ளார்கள் அந்த கொதிப்பை அடக்க ஆளுநரை மாற்றுவது தவிர வேறு வழி இல்லை - காதர் மொய்தீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது அதில் அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், எம்.பி நவாஸ் கனி உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில்,

பப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசுக்கு கண்டனம், ஆளுநர்களின் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு வரவேற்போம் அந்த தீர்ப்பை பெற்றுத் தந்த முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காதர் மொய்தீன்,

ஆளுநர்களின் எதேச்சதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.ஆளுநர் விவகாரத்தில் நிதான்மாக இருந்து சட்ட போராட்டம் நடத்தி முதல்வர் இந்த வெற்றியை பெற்றுத் தந்துள்ளார் அதற்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வக்ஃபு திருத்த சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வழக்கு தொடர்ந்து உள்ளோம். அந்த வழக்கில் தங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என ஒன்றிய அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு இடையூறு செய்யும் வகையில் கேவிஎட் மனு தாக்கல் செய்துள்ளார்கள். உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து வரும் 16ஆம் தேதி கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளோம். உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு ஆளுநர் தலையில் பேரிடியை இறக்கி உள்ளது. ஆளுநர் இன்னும் பதவியில் நீடித்துள்ளார் என்றால் அதற்கு ஒன்றிய அரசு தான் காரணம். அவர் பதவி விலக வேண்டும் என்பது நம் ஆசையாக இருக்கலாம் ஆனால் அது குறித்து ஒன்றிய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.

ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள் கொதித்து போய் உள்ளார்கள்.அந்த கொதிப்பை அடக்க ஆளுநரை மாற்றுவது தவிர வேறு வழியில்லை.வக்ஃபு சட்டத்தில் மறுபரிசீலனை செய்து திருத்தங்கள் மேற்கொள்ளும் போது இஸ்லாமிய அறிஞர்களை கலந்து ஆலோசிப்போம் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறினார்கள்.ஆனால் யாரிடமும் ஆலோசனை பெறவில்லை.வக்ஃபு பெயரை உமீத் என பெயர் மாற்றி உள்ளார்கள்.

பா.ஜ.க அவர்கள் நினைத்ததை திணித்து புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளார்கள்.வக்ஃபு சட்டம் முஸ்லிம் சமுதாயத்தின் அடிப்படையை தகர்க்கும் சட்டம். முஸ்லிம்களை வெவ்வேறு பெயர் வைத்து பிரிக்க பார்க்கிறார்கள்.இது வெறும் சட்டம் அல்ல இஸ்லாமிய சமுதாயத்தை அழிக்கும் திட்டம்.நீதிமன்ற முடிவு எங்களுக்கு சாதகமாக இல்லை என்றால் சாலையில் இறங்கி தொடர்ந்து போராடுவோம். 

அதிமுக - பா.ஜ.க கூட்டணி வைப்பது அவர்களின் விருப்பம் அதனால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.நாங்கள் திமுக உடன் அன்றும் கூட்டணி வைத்தோம் இன்றும் கூட்டணியில் உள்ளோம் என்றும் கூட்டணியில் இருப்போம் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision