திமுகவிற்கு முட்டுக்கொடுக்கும் கூட்டணி கட்சிகளின் செயல் வெட்கக்கேடானது - திருச்சியில் ஜி.கே.வாசன் பேட்டி

திமுகவிற்கு முட்டுக்கொடுக்கும் கூட்டணி கட்சிகளின் செயல் வெட்கக்கேடானது - திருச்சியில் ஜி.கே.வாசன் பேட்டி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மண்டல, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் டெல்டா மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த மாதம் வரை கட்சியில் நடந்த உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.

டெல்டா மாவட்டங்களில் உறுப்பினர்களானவர்களுக்கான உறுப்பினர்கள் அட்டை இன்று முதல் வழங்கப்படுகிறது. இதனை ஜி.கே.வாசன் தொடக்கி வைத்தார். முன்னதாக செய்தியார்களை சந்தித்து பேசிய ஜி.கே.வாசன்..... சட்டமன்றத்தில் த.மா.க பலமான குரலாக ஒலிக்கும் வகையில் இந்தாண்டு முழுவதும் எங்கள் களப்பணி செய்ய உள்ளோம். தமிழகத்தில் மது, போதை கலாச்சாரம் பெருகி உள்ளது. அது தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு காரணமாகிறது. 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போராடும் எதிர்க்கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர். அதிமுக, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி வரிசையில் இன்று செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்கட்சிகளை கைது செய்வதன் மூலம் அவர்களின் குரலை ஒரு போதும் நசுக்க முடியாது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுகவிற்கும் முட்டுக்கொடுக்கும் கூட்டணி கட்சிகளின் செயல் வெட்கக்கேடானது

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை அரசு முழுமையாக வழங்கவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவேரி நீர் கடலில் கலந்து வீணாகிறது எனவே காவேரியின் குறுக்கே தடுப்ப்ணை கட்ட வேண்டும். காவேரி - குண்டாறு திட்டத்திற்கான நிதியை முழுமையாக ஒதுக்க வேண்டும். மக்களுக்கு பிரச்சனை எண்றால் எதிர்த்து குரல் கொடுப்பது எதிர்க்கட்சிகள் கடமை. அதனை தொடர்ந்து செய்வோம்.

தமிழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. காவல்துறை கண்டிப்புடன் நடக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தர வேண்டும். இந்தியாவிலேயே தமிழகம் தான் பாலியல் குற்றங்கள் குறைவாக நடக்கிறது என பேசுவது வெட்கக்கேடானது. தமிழகத்தில் 100 சதவீதம் பாலியல் குற்றம் இல்லாத நிலை இருக்க வேண்டும் என தான் யாராக இருந்தாலும் கூற வேண்டும்.

2026 சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்து கூட்டணி வலுவடைய வாய்ப்புள்ளது. அது தேர்தல் நேரத்தில் தான் தெரியவரும் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து ஆளுங்கட்சியை வீழ்த்துவோம். ஒத்த கருத்து என்பது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision