மாதந்திர குற்ற தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு

மாதந்திர குற்ற தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு

திருச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் மாதந்திர குற்ற தடுப்பு கலந்தாய்வு கூட்டம் ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் நடைபெற்று வருவது வழக்கம். அதே போன்று இன்று (17.04.2025) ஏப்ரல் மாதத்திற்குரிய குற்ற தடுப்பு கலந்தாய்வு கூட்டம் மேற்படி

ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பிற துறைகளான சட்டத்துறை, சிறைத்துறை, மருத்துவத்துறை மற்றும் காவலர்கள் வீட்டு வசதி வாரியத்துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு காவல்துறையினருக்கும், பிற துறைகளுக்கும் தொடர்புடையதாக சங்கதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் 2-கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள். 1-உதவி காவல் கண்காணிப்பாளர். 8-துணை காவல் கண்காணிப்பாளர்கள், 30-காவல் ஆய்வாளர்கள் (சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து), 55-உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேற்படி கூட்டத்தில் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்கப்பட வேண்டிய வழக்குகள் மற்றும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் பற்றி விவாதித்து தக்க அறிவுரைகளை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கியுள்ளார்.

மேலும், இக்கலந்தாய்வு கூட்டத்தின் போது கடந்த 01.04.2025 முதல் 09.04.2025-ஆம் தேதி வரை நடைபெற்ற தொட்டியம் மதுர காளியம்மன் கோவில் திருவிழாவில் எந்தவித சிறு அசம்பாவிதமும் இல்லாவண்ணம் சிறப்பாக பணியாற்றிய 25 காவல்

 அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டு சான்றிதழ் வழங்கி வெகுவாக பாராட்டினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision