ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக செயின்ட்ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக செயின்ட்ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி இரயில்வே பாதுகாப்பு படை சார்பாக செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சிஇன்று( 04.03.2025) திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் திரு. பிரமோத் நாயர் ஆகியோர்களது உத்தரவின் பேரில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் திரு. K. P. செபாஸ்டியன் அவர்கள் தலைமையில் திருச்சி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது அவர்கள் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை பற்றி விளக்கி கூறினர்

 ✓ரயில் தண்டவாளத்தை கடக்காதீர்கள் மற்றும் உங்கள் விலைமதிப்பற்ற உயிரை இழக்காதீர்கள்.

 ✓ரயில்தடங்கள் ரயில்களுக்கு மட்டுமே.

 ✓ரயிலின் படியில் பயணம் செய்ய வேண்டாம்.

 ✓ஓடும்/ நகரும் ரயில்களில் நுழையவோ/தடுக்கவோ வேண்டாம்.

 ✓ ஓடும் ரயில்கள்/ ரயில் பாதைகளுக்கு அருகில் செல்ஃபி எடுக்க வேண்டாம்.

  ✓ரயில் பாதையில் கல்லை வைக்காதீர்கள், அது ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

 ✓ரெயில்வே வழியாக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் / பட்டாசுகள் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.

  மேற்கூறிய நடவடிக்கைகளின் தீவிரத்தன்மை மற்றும் விளைவுகள் குறித்து அவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சுமார் 750 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சுமார் 500 துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp ஆப் மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision