பள்ளி மாணவர்களுக்கு மக்கும், மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 3, வார்டு எண் 37 காமராஜ் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பேனாவிற்கு பதிலாக மறுபடியும்
பயன்படுத்தக்கூடிய மை பேனா வழங்கும் நிகழ்வானது இன்று மாநகராட்சி துணை ஆணையர் திரு. கா . பாலு அவர்களின் தலைமையிலும் மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர் திரு திருப்பதி அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பேனாவிற்கு பதில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மை பேனாவானது பெற்றுக் கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளும் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்களும் மேற்பார்வையாளர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision