‌ திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் தாய்ப்பால் வாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

‌ திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் தாய்ப்பால் வாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

 தாய்ப்பாலின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இந்திய மருத்துவ சங்கம், தேசிய பச்சிளங்குழந்தை மருத்துவ சங்கம், குழந்தைகள் நல மருத்துவ சங்கம், மகப்பேறு மருத்துவ சங்கம் ,மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் மெட்ரோ திருச்சி, EKam பவுண்டேஷன், ஐசிடிஎஸ், இன்னர்வீல் திருச்சி மெட்ரோ பிரிவு ஆகியோர் இணைந்து தாய்ப்பாலை ஊக்குவிக்க முனைந்து முன்வருவீர்! கற்பிப்போம் கைகொடுப்போம் என்ற கருப்பொருளோடு உலக தாய்பால் வாரத்தை முன்னிட்டு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

திருச்சி காவேரி மகளிர் கல்லூரி சமூகப்பணி துறையின் அமிட்டி கிளப் ஒருங்கிணைத்த ‌ தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  நேற்று நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் சிராஜூதீன் நசீர்,தேசிய பச்சிளம் குழந்தை மருத்துவ குழுவின் செயலாளர் டாக்டர் செந்தில்குமார், காவேரி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி, இன்னர் வீல் அறக்கட்டளையின் திருச்சி மாவட்ட தலைவர் சூரிய பிரபா ராஜசேகரன்,

 லயன்ஸ் கிளப் உறையூர் திருச்சிராப்பள்ளி தலைவர் சரவணன் ,லயன்ஸ் கிளப் மண்டலத் தலைவர் மனோஜ் EKAM அறக்கட்டளையின் தலைவர் சிவகுமார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

நிகழ்வு குறித்து மருத்துவர் செந்தில் குமார் கூறுகையில்,

 மாணவிகளிடையே இது போன்ற விழிப்புணர்வு கொண்டு செல்லும்போது அவர்களுடைய குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் எளிதில் கொண்டு சேர்க்க முடியும் என்றார்.

EKAM அறக்கட்டளையின் தலைவர் சிவக்குமார் கூறுகையில் இதுபோன்ற பல்வேறு கல்லூரிகளில் நாங்கள் தாய்ப்பால் வாரம் குறித்து ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் காவேரி மகளிர் கல்லூரியில் இது இரண்டாவது ஆண்டு.சென்ற ஆண்டு இணையவழியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 தாய்ப்பால் ஊட்டுதல் அவசியம் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த பெண்கள் தெரிந்து கொள்ளவேண்டும் இன்றைய தலைமுறையினர் அது குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது கவலைக்குரியது அவர்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ‌ என்ற நோக்கில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

அமிட்டி கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராணி கூறுகையில்,  சமூகம் சார்ந்த ‌‌ பல்வேறு விழிப்புணர்வு  செயல்களை அமிட்டி அமைப்பு மூலம் செய்து வருகின்றோம் என்றார்.

காவேரி மகளிர் கல்லூரி சமூகப்பணி துறை இணைப் பேராசிரியர் டாக்டர் ஜி மெட்டில்டா புவனேஸ்வரி வரவேற்புரை வழங்கினார் அமிட்டி கிளப்பின் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ‌ செல்வி நன்றியுரை வழங்கினார்இந்நிகழ்வில் கல்லூரியை சேர்ந்த 200க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO