இன்று மதியம் முதல் 7 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயங்கும் - தமிழக அரசு

இன்று மதியம் முதல் 7 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயங்கும் - தமிழக அரசு

நிவர் புயல் நேற்று இரவு காரைக்கால் மற்றும் மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. இந்நிலையில் நிவர் புயலுக்காக தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

Advertisement

அதன்படி கடந்த 24ம் தேதி மதியம் 1 மணி முதல் பேருந்து சேவைகளை 7 மாவட்டங்களில் ரத்து செய்து உத்தரவிட்டனர். விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.

Advertisement

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு புயல் கரையைக் கடந்ததும் இன்று மதியம் முதல் இந்த ஏழு மாவட்டங்களுக்கும் வழக்கம்போல பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.