வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கியவர் மற்றும் விற்றவர் மீது வழக்கு பதிவு

வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கியவர் மற்றும் விற்றவர் மீது வழக்கு பதிவு

கடந்த (20.07.2024)-ஆம் தேதி இரவு 20:00 மணி அளவில் பெட்டவாய்த்தலை சோதனை சாவடியில் பெட்டவாய்த்தலை காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது. பழங்காவிரி மேலத்தெருவைச் சேர்ந்த ரஜினி (எ) கதிர்வேல் (47) (சோழிய வெள்ளாளர்). த.பெ.காமாட்சிபிள்ளை என்பவர் மதுபோதையில் TN45-BD- 7324

Wego Scooty என்ற இரு சக்கர வாகனத்தில் வந்தவரது வாகனத்தை காவல்துறையினர் கைப்பற்றி பெட்டவாய்த்தலை சோதனை சாவடியில் வைக்கப்பட்டு அதிக மது போதையில் இருந்ததால் மேற்படி ரஜினி (எ) கதிர்வேலை அடுத்த நாள் (21.07.2024) காலை 10:00 மணிக்கு காவல் நிலையம் வருமாறு அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டது.

2) ஆனால், மேற்படி ரஜினி (எ) கதிர்வேல் அன்று இரவு 21:30 மணியளவில், பெட்டவாய்த்தலையில் உள்ள HP பெட்ரோல் பங்கில் இருந்து சுமார் 1 லிட்டர் கேனில் பெட்ரோலை வாங்கி கொண்டு, நாகநாதர் டீ கடை அருகே, தனது தலையில் தானே பெட்ரோலை ஊற்றி கொண்டிருந்தவரை, அங்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் அவரை தடுத்த போது அசிங்காமான வார்த்தைகளால் பேசி அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் இடையூறு செய்த மேற்படி ரஜினி (எ) கதிர்வேல் மீது . 82/24. U/s 296(b), 132, 287, 351(2) BNS-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

3) மேற்படி ரஜினி (எ) கதிர்வேல்-க்கு சட்டத்திற்கு புறம்பாக வாட்டர் கேனில் பெட்ரோல் விற்பனை செய்த HP பெட்ரோல் பங்கின் விற்பனையாளர் சதீஸ்குமார் (19), த.பெ. மரியப்பன். பழங்காவேரி. ஸ்ரீரங்கம் என்பவர் மீது பெட்டவாய்த்தலை காவல் நிலைய குற்ற எண். 84/24, U/s 287 BNS-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

4) மேலும், இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக வாட்டர் கேனிலோ அல்லது வேறு ஏதேனும் பாட்டில்களிலோ சில்லரையாக பெட்ரோல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision