10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது- திருச்சி மாவட்டத்தில் 34,479 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, திருச்சி கல்வி மாவட்டத்தில் 99 மையங்களிலும், லால்குடி கல்வி மாவட்டத்தில் 74 மையங்களிலும், இத்தேர்வை 173 மையங்களில், 17 ஆயிரத்து 523 மாணவர்கள், 16 ஆயிரத்து 956 மாணவிகள் என 34 ஆயிரத்து 479 மாணவ,மாணவிகள் எழுதுகின்ற னர்.
8 மையங்களில் தனித் தேர்வர்கள் எழுது கின்றனர். மத்திய சிறைச் சாலையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு 40 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.இத்தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க 231 பறக்கும் படை ஆயிரத்து 653 அறை கண்காணிப்பாளர் களாக ஆசிரியர்களும், 348 அலுவலக பணியா ளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி கல்வி மாவட்டத்தில் 2 வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களும், லால்குடி கல்வி மாவட்டத்தில் 7 வினாத் தாள் கட்டுப்பாட்டு மையங்களும் என மொத்தம் 9 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களிலிருந்து 37
வழித்தட அலுவலர்கள் ஆயுதம் ஏந்திய போலீசாருடன் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் சென்றடைய சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிக்கின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision