திருச்சியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு தகவல் ஆணையர் மறுப்பு - 3 பேர் இறப்பு என யார் பரப்பியது விசாரணை

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட, உறையூர் மின்னப்பன்தெரு , பனிக்கன்தெரு, காமாட்சிஅம்மன் தெரு. நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் மற்றும் திமுக வார்டு கவுன்சிலரிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூன்றரை வயது பெண் குழந்தை பிரியங்கா மற்றும் லதா, மருதாம்பாள் ஆகிய பெண்கள்
என மொத்தம் மூன்றுபேர் அடுத்தடுத்து உயிரிழந்ததாக தகவலை சிலர் பரப்பி உள்ளதாக தெரிகிறது.அதேநேரம், மாநகராட்சி அதிகாரிகளோ, அமைச்சரோ இதுகுறித்து எந்தநடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர், போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் பிரட், பரோட்டா உள்ளிட்டவைகளை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு உடனே நின்றுவிடும் என
அலட்சியமாக பதிலளித்ததுடன், மெத்தனப்போக்குடன் அலட்சியமாக செயல்பட்டுவரும் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்தசெயல் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் இந்த தகவலுக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை அதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.
குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக தகவல் பரவி வருவது உண்மை அல்ல பொதுமக்கள் வீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இச்செய்தியை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த குழந்தை இறந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் சிகிச்சைக்கு கொண்டு வந்ததாக தகவலை தெரிவித்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision