கோயம்பேடு போல் திருச்சி புதிய காய்கறி மார்க்கெட் வரவேண்டும் இல்லையென்றால் செல்லமாட்டோம் - திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமைப்பினர் அதிரடி முடிவு

கோயம்பேடு போல் திருச்சி புதிய காய்கறி மார்க்கெட் வரவேண்டும் இல்லையென்றால் செல்லமாட்டோம் - திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமைப்பினர் அதிரடி முடிவு

கோயம்பேடு போல் திருச்சி புதிய காய்கறி மார்க்கெட் வரவேண்டும் இல்லையென்றால் செல்லமாட்டோம் - திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமைப்பினர் அதிரடி முடிவு

திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள திருமண மண்டபத்தில் காந்தி சந்தை வியாபாரிகள் கூட்டமைப்பினர் மூன்று கோடி கூட்டம் நடத்தின இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.முக்கியமாக மே 9 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பஞ்சப்பூரில் புதிய காய்கறி சந்தைக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த

 திருச்சி காந்தி சந்தை வியாபாரிகள் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். தற்போது இயங்கி வரும் காந்தி சந்தையை விட்டு நாங்கள் வேறு எங்கும் செல்ல மாட்டோம். அப்படியே நாங்கள் சென்றாலும் மொத்த வியாபாரிகளுக்கு குறைந்தபட்சம் 1800 ல் இருந்து 2000 சதுர அடி இடம் ஒதுக்க வேண்டும். மாடி கட்டிடம்

இருக்கக் கூடாது. ஏற்கனவே கடந்த ஆட்சியில் கள்ளிக்குடியில் 25 கோடி ரூபாயில் மார்க்கெட் உருவாக்கி எந்த பயன்பாடும் இல்லாமல் உள்ளது.தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சிக்கு வந்து காந்தி சந்தைக்கு வருகிற மே 9 அடிக்கல் நாட்ட இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆகவே காந்தி சந்தை வியாபாரிகள் கூட்டமைப்பினரை கலந்து ஆலோசித்து அதிகாரிகள் புதிய காய்கறி

மார்க்கெட்டை உருவாக்க வேண்டும். குறைந்தபட்சம் 25 ஏக்கரில் உருவாக்க வேண்டும். சில்லறை வணிகத்திற்கு 600 சதுர அடி இடம் வேண்டும் இவை அனைத்தையும் எங்களிடம் தெளிவுபடுத்திவிட்டு புதிய மார்க்கெட் கட்டும் பணியை தொடர வேண்டும். எங்களை கேட்காமல் பணிகளை மேற்கொண்டால் நாங்கள் பல்வேறு விதமான போராட்டங்களுக்கு முன்னெடுப்போம் என திருச்சி காந்தி சந்தை வியாபாரிகள் கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த வருடம் மாவட்ட ஆட்சியர் உடன் நடந்த கூட்டத்தில் புதிய மார்க்கெட் வரும் வரைபடத்தை காண்பித்தனர் அதற்கு நாங்கள் இதுபோன்ற மார்க்கெட் கட்டமைப்பை உருவாக்கினால் போக மாட்டோம் என சொல்லிவிட்டு வந்தோம் இது முதல் கூட்டம் அடுத்ததாக உங்களிடம் கலந்தாய் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார்.முதல் தளம் இரண்டாவது தளம் என்று மாடியாக கட்டினால் கூலி ஆட்கள் வேலை செய்ய முடியாது. அந்த காலத்திலேயே மாட்டு வண்டியை வைத்திருந்தது போலவே 6

ஏக்கருக்கு மேல் காய்கறி மார்க்கெட் உருவாக்கப்பட்டது தற்பொழுது கனரக வாகனங்கள் சந்தைக்குள் வருகிறது கோயம்பேடு மார்க்கெட் போல் எங்களுக்கு புதிய காய்கறி மார்க்கெட்டை பஞ்சப்பூரில் உருவாக்கி தர வேண்டும் அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் வியாபாரிகள் நலச் சங்க தலைவர் காதர் அவர்கள்  கேட்டுக் கொண்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision