சென்னை கோட்டையை கார்களால் முற்றுகையிடும் போராட்டம் திருச்சியில் அறிவிப்பு

அனைத்து வாகன ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அனைத்து சங்க நிர்வாகிகள ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாரதியார் சாலையில் உள்அரங்கில் கூட்டமைப்பின் தலைவர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது.
தமிழக முழுவதும் இருந்து பல்வேறு வாகன ஓட்டுனர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களின் இன்னல்கள் குறித்தும், தமிழக அரசு மற்றும் போக்குவரத்துதுறையால் ஆட்டோ மற்றும் டூரிஸ்ட் கேப் மேக்சி கேப், சரக்கு வாகன ஓட்டுநர்கள் என ஓட்டுனர் தொழிலாளர்கள் எந்த ஒரு கோரிக்கையில் நிறைவேற்றவில்லை எனவும் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தினர்.
மேக்சி கேப் வாகனங்களுக்கு சீட் பெர்மிட் உயர்த்தி வழங்காததால் அண்டை மாநிலங்களில் இலட்சக்கணக்கில் அபராதம்விதிக்கப்படுவதை தடுத்து மற்றமாநிலங்களைபோல இருக்கைகளுக்கு ஏற்ப பர்மிட் வழங்கவேண்டும், மேக்சி கேப் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால வரியில் உள்ள குளறுபடிகளை போக்க போக்குவரத்து துறை ஆணையர் தொழிற்சங்க நிர்வாகிகளோடு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணவேண்டும்,
சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதை தமிழக அரசு இனியும் வேடிக்கை பார்ப்பதைக்கண்டித்தும், ஓலா, உபர் போன்ற நிறுவனங்களை முறை படுத்தாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் திமுக அரசு கண்டித்தும், ஆட்டோ மீட்டர் கட்டணங்களை உயர்த்தாமல் வாகன ஓட்டுனர்களை மற்றும்
வாகன உரிமையாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு அனைத்து வாகன ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துக் கொண்டதுடன், ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் பகல் கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அனைத்து வாகன ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக தமிழக சட்டமன்றத்தில் போக்குவரத்து மானிய கோரிக்கை நடைபெறும் 23ஆம் தேதியன்று ஆயிரக்கணக்கான வாகனங்களுடன் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அரசுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்தனர்.
பத்துக்கும் மேற்பட்ட முறை போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வர் ஆய்வுவரை சந்தித்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கைகள் முன்வைத்தும் கோரிக்கைகளை தீர்ப்பதாக இல்லை எனவே, பல கட்ட போராட்டம் நடத்தியும் தீர்வு எட்டப்படாததால் இறுதி கட்டமாக கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளதாகவும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
.