மத்திய சிறை சிறப்பு முகாமில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஆய்வு
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில், பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட, இலங்கையை சேர்ந்த 67 பேர் உட்பட கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளி நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், பலருக்கு
தண்டனை காலம் முடிந்தும் விடுவிக்கப்படவில்லை என்று கூறி, அவர்கள், பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த மே மாதம் முதல் 15க்கும் மேற்பட்டோர், தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், உமா ரமணன் என்பவர், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 5க்கும் மேற்பட்டோர் அதிக அளவு துாக்க மாத்திரைகள் உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின், அவர்கள் மீண்டும் சிறப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.
அதனால், திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோர் இன்று ஆய்வு நடத்தினர். அங்கிருந்த முகாம் வாசிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO