திருச்சியில் வெப்பச்சலனம் - தீப்பிடித்து எரிந்த 6 விளை நிலங்கள்

திருச்சியில் வெப்பச்சலனம் -  தீப்பிடித்து எரிந்த 6 விளை நிலங்கள்

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் பகலில் வெப்பக்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது. 

இதனால் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த விடத்தி லாம்பட்டி அருகே ஆணையூர்சாலையில் விளைநிலத்திலிருந்த சோளதட்டைகள் தீடீரென தீப்பற்றி எரிந்தது. வையம்பட்டி ஒன்றியம் பொம்மம்பட்டியில் பால்சாமி மற்றும் 10 நபர்களுக்கு சொந்தமான பட்டா குளம் பகுதியிலிருந்த சீமை கருவேலம், சப்போட்டா பழ மரங்கள், கொழிஞ்சி செடிகள்என எரிந்து நாசமானது. இது குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

அதேபோல், மருங்காபுரி ஒன்றியம் முத்துப்பட்டி கிராமத்தில் கொழிஞ்சி செடிகள், பாலக்குறிச்சியில் தைல மரக்காடு, சின்னாரம்பட்டி கிராமத்தில் வைக்கோல் போர் என 3 இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினர் நிலைய அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலை அலுவலர் நாகேந்திரன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision