வரி செலுத்துபவர்கள் மிக முக்கியமானவர்கள் - சுங்கத்துறை ஆணையர் பேச்சு

வரி செலுத்துபவர்கள் மிக முக்கியமானவர்கள் - சுங்கத்துறை ஆணையர் பேச்சு

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை நினைவு கூறும் வகையில் திருச்சி சுங்க இலாகா மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி துறையினர் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக இன்று திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் சந்திப்புக்கு முன்னதாக நாடகங்கள், நடனங்கள், தெருக்கூத்துகள் இதுபோன்ற பல்வேறு விதமான விழிப்புணர்வு பரப்புரைகளை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க திட்டமிட்டு நடத்தி வருகின்றனர். 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய திருச்சி சுங்க இலாகா ஆணையர் அனில் நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு சுங்க இலாகா மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி மக்களுக்கு கிடைக்கும் பலன்களையும் விளக்கிப் பேசினார். நாட்டில் வரி செலுத்துபவர்கள் மிக முக்கியமானவர்கள். பொதுமக்கள் வரி செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் எடுத்துரைத்தார்.

மத்திய பேருந்து நிலையத்தில் சுதந்திரத்திற்கு முன்பான வரி விதிப்பும், தற்போதைய சுங்கம் மற்றும் சேவை வரித் துறையில் இணக்கமான வரி குறைப்பும் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடை பெற்றது.  திருச்சி சுங்க இலாகா முதன்மை ஆணையர் உமாசங்கர், ஆணையர் அனில் கலந்து கொண்டனர். சுங்க இலாகா அதிகாரிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO