பெரிய வணிக நிறுவனங்களின் கழிவுகளை மாநகராட்சி எடுக்காது: ஆணையர் அறிவிப்பு:
திருச்சியில் சுமார் 65 வார்டுகளும் 10 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட மாநகராட்சியாக விளங்கி வருகிறது. இங்கு ஒரு நாளைக்கு மட்டும் 460 டன் கழிவுகள் சேருகின்றன. இதில் 246 டன் மக்கும் குப்பைகளும் 214 டன் மக்காத குப்பைகளும் சேருகின்றன.
இதுக்குறித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறியதாவது
“மாநகரை தூய்மைப்படுத்தும் பணி வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும். திருச்சியில் 30 சதவீதம், பெரிய ஓட்டல்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பெரிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்படுகின்றன. டிசம்பர், 1 முதல், இந்த குப்பையை எடுக்க, மாநகராட்சி லாரிகள் அனுப்பப்பட மாட்டாது. அந்தந்த நிறுவனங்களில் சேரும் குப்பையை, அதே வளாகத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், உரமாக்கி கொள்ள வேண்டும். தினமும், 100 கிலோவுக்கு மேல் குப்பை சேரும் நிறுவனங்களுக்கு, இந்த நடைமுறை பொருந்தும்” என்றார்.
வருகிற டிசம்பர் 1 ம் தேதி முதல் வாகனங்கள் வராத நிலையில், பெரிய வணிக நிறுவனங்கள் தங்களுடைய கழிவுகளை அகற்றிக் கொள்ள போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.