ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் போலீசார்
திருச்சி பொன்மலைப்பட்டி, அமுல்நகரை சேர்ந்த சதீஷ் என்பவா் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வந்த நகை விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூ.80,000க்கு நகை ஆர்டர் செய்து அந்த பணத்தை அனுப்பி உள்ளார். ஆனால் பொருள் வந்து சேரவில்லை என்பதால் இழந்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரியும், திருச்சி தென்னூர் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த நேஷா என்பவர் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து நகை வாங்குவதற்காக ரூ.3,000 பணத்தை கட்டியதாகவும் ஆனால் பொருள் வந்து சேரவில்லை என்பதால் இழந்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரியும் ,திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகாநகரை சேர்ந்த ராகவேந்தர் என்பவர் ஆன்லைன் மூலமாக அலைபேசியை ரூ.58,049-க்கு ஆர்டர் செய்து பின்னர் அதனை ரத்து செய்து விட்டதாகவும், கம்பெனி விதிமுறைப்படி தனக்கு முழுத்தொகை வரவேண்டும் என்றும் ஆனால் ரூ.100- மட்டுமே திரும்ப கிடைத்ததாகவும், மீதிபணம் ரூ.57,049வரவில்லை என்பதால் தனது பணத்தை மீட்டுத்தரக்கோரியும் ஆன்லைன் மூலமாக புகார் கொடுத்தனர்.
இந்த மனுக்களை திருச்சி மாநகர ஆணையர் கார்த்திகேயன் உத்தரவுப்படி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முறைகேடாக நடை பெற்ற பண பரிவர்த்தனை பற்றி விசாரணை நடத்தினார்.
மேற்படி ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் புகார்தாரருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்மந்தப்பட்;ட வங்கிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததன் பேரில் மனுதாரர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1,41,000 திரும்ப சேர்க்கப்பட்டது.
மேலும் இது போன்று ஆன்லைன் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற ஆன்லைனில் வரும் நம்பி தங்களின் வங்கி கணக்கை யாரிடமும் பகிர்ந்து ஏமாற வேண்டாம் எனவும், யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண்: 1930 தொலைபேசி எண்ணை விரைவாக தொடர்பு கொள்ளுமாறு கமிஷனர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..