சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - திருச்சி திமுக வேட்பாளர்கள்!!

சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - திருச்சி திமுக வேட்பாளர்கள்!!

Advertisement

சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Advertisement

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, திமுகவில் காங்கிரஸ் 25, விசிக 6, மதிமுக 6, சிபிஐ 6, சிபிஎம் 6, ஐயூஎம்எல் 3, கொ.ம.தே.க. 3, மமக 2, த.வா.க. 1, ம.வி.க. 1, ஆதித்தமிழர் பேரவை 1, பார்வார்டு பிளாக் கட்சி 1 என 61 தொகுதிகளை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதில் குறிப்பாக வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது

இந்நிலையில் திருச்சி 7 சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.‌இதில் திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ், திருச்சி மேற்கு - கே.என் நேரு, ஸ்ரீரங்கம் - பழனியாண்டி, திருவெறும்பூர் மகேஷ் பொய்யாமொழி,லால்குடிசெளந்தரபாண்டியன், மண்ணச்சநல்லூர் கதிரவன், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகின்றன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I