திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு மே15 முதல் தினசரி விமான சேவை

திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு மே15 முதல்  தினசரி விமான சேவை

திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவை வழங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு. உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்த நிலையில், சர்வதேச விமான சேவைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. அதன்படி, உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை தற்போது அதிகரித்துள்ளன. 

இந்த நிலையில், திருச்சி மற்றும் மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவை வழங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி நேரடி விமான சேவை வழங்கப்படும் என்றும் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு 6E 1817 என்ற விமானமும், திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு 6E 1816 என்ற விமானமும் இயக்கப்படும்.இந்த விமானமானது 2.05 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து 3.05 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு செல்லும் எனவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருச்சியில் இருந்து குவைத்துக்கு வாரம் ஒரு முறை (செவ்வாய்கிழமை ) ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவையை மே3 முதல் தொடங்கவுள்ளது. ஜூலை மாதம் முதல் விமானத்தை இருமுறை (செவ்வாய் மற்றும் சனிக்கிழமை) இயக்குகிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்த நிலையில், சர்வதேச விமான சேவைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த இரு அறிவிப்புகளும் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO