ஆல்கஹால் உள்ளிட்ட வதந்திகளை நம்ப வேண்டாம் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை  அமைச்சர் திருச்சியில் பேட்டி

ஆல்கஹால் உள்ளிட்ட வதந்திகளை நம்ப வேண்டாம் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை  அமைச்சர் திருச்சியில் பேட்டி

 தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி அரசு மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டு கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகத்தில் 14 லட்சத்து 89 ஆயிரம் கோவிசீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும் ஒரு லட்சத்து 89ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளதாக தெரிவித்தார் .இதுவரை 3 லட்சத்து 59 ஆயிரம் முன் களப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது .

விரும்பும் தடுப்பூசியை முன்களப்பணியாளர்கள் போட்டுக் கொள்ளலாம்.  விரைவில் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் வெகுவிரைவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர் தமிழகத்தில் இரண்டாவது கோவிட் அலை வருவதற்க்கான சாத்தியக்கூறுகள் இல்லை. தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆல்கஹால் உள்ளிட்ட வதந்திகளை நம்ப வேண்டாம்.   மருத்துவர் ஆலோசனைப்படி தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முழுவதும் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை நான் இரண்டாவது டோஸ் ஆக போட்டுக்கொண்டேன் எனவும் குறிப்பிட்டார்.ஏற்கனவே சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி முதல் டோஸ் கோவிட் தடுப்பு ஊசி (கோவாக்சின்)போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH