திருச்சியில் பிரபல கஞ்சா வியாபாரி கைது:

திருச்சியில் பிரபல கஞ்சா வியாபாரி கைது:

திருச்சி ராம்ஜிநகர் பகுதியைச் கமால் . இவர் பிரபல கஞ்சா வியாபாரி என கூறப்படுகிறது. காவல்துறை கண்களில் மண்ணை தூவி விட்டு மிகப்பெரிய அளவில் கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இவரை நீண்ட நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலையில், மத்திய பேருந்து நிலையம் அருகில், மத்திய அரசை கண்டித்து திமுக நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

கமால்

இதனை அறிந்த திருச்சி கண்டோன்மெண்ட் துணை ஆணையர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.