கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!!

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!!

திருச்சி 61 வது வார்டு முதல் 65 வரை சேகரிக்கப்படுகின்ற கழிவு நீர் முழுவதும், கீழ கல்கண்டார் கோட்டை பகுதியில் சுத்திகரிக்கும் வகையில், பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூபாய் 53 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய நிலங்களுக்கு இடையில் அமைந்துள்ள மூன்று ஏக்கர் நிலத்தில் மாவட்ட நிர்வாகம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கட்டுமான பணிகளை தொடங்கியுள்ள நிலையில், நத்த களம் பகுதி விவசாயம் சார்ந்தது என்றும், சோழர் காலம் முதல் விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்ட நிலம் என்பதால், வரலாற்று சிறப்புமிக்க நிலத்தை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கொடுக்க மாட்டோம் என்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

சாக்கடை கழிவுநீரை விவசாய நிலத்தில் விட கூடாது, விவசாயத்திற்கு உள்ள இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது, விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க வேண்டும், 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ஓய்வூதியம் ரூ. 5000/- வழங்க வேண்டும், காவிரி – அய்யாறு – உப்பாறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் படுத்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

(கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதாக கூறப்படும் இடம் புதுக்கோட்டை ராணி மங்கம்மாள் ஓய்வு எடுத்த தாக கூறப்படும் வரலாற்று சிறப்பு மிக்க இடம் என்பது குறிப்பிடத்தக்கது)