திருவெறும்பூர் அருகே காதல் தோல்வியால் பெண் ஸ்டேஜ் டான்சர் தூக்கிட்டு தற்கொலை

திருவெறும்பூர் அருகே காதல் தோல்வியால் பெண் ஸ்டேஜ் டான்சர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருவெறும்பூர் அருகே உள்ள டி நகரை சேர்ந்த முத்துவேல் மாரியம்மாள் தம்பதி இவர்களுக்கு மகாதேவன் மகாவிஷ்ணு என இரண்டு மகன்களும் மகா தர்ஷினி என்ற மகளும் உள்ளனர்
இதில் மகா தர்ஷினி (22) இவர் விழாக்களில் ஸ்டேஜ் டிரான்ஸ் ஆடும் குழுவில் இணைந்து டான்ஸ் ஆடி வந்தார்.அப்படி தன்னுடன் டான்ஸ் ஆடும் ஒருவரை மகா தர்ஷினி காதலித்து வந்து உள்ளார்.இந்த நிலையில் மகாதர்ஷினியின் காதலன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது மகாதர்ஷினிக்கு தெரிய வந்துள்ளது.இதனால் மனம் உடைந்த மகா தர்ஷினி நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் ஃபேன் ஊக்கில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகாதர்சனியின் உடலை கைப் பற்றிய பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision