தண்ணீர் குடிக்க மணி அடிக்கும் அரசு பள்ளி: குழந்தைகள் தின ஸ்பெஷல்:

தண்ணீர் குடிக்க மணி அடிக்கும் அரசு பள்ளி: குழந்தைகள் தின ஸ்பெஷல்:

பொதுவாக பூமி முழுவதும் சுமார் 75% தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும், அதில் 2.5% மட்டுமே மனிதர்கள் குடிக்க பயன்படுத்தும் சுத்தமான தண்ணீராக உள்ளது. நமது உடலில் 70%-ற்கும் மேலாக தண்ணீரால் மட்டுமே நிரம்பியுள்ளது. இதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து எப்பொழுதும் கிடைக்கிறது.
நமது உடலில் உள்ள எல்லா அமைப்புகளும் தண்ணீரின் செயல்பாட்டைப் பொறுத்தே உள்ளன.
இப்படிப்பட்ட தண்ணீரின் நன்மையை நாம் உணருவதே இல்லை என்பதே நிதர்சனம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள கருங்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு கடந்த ஒரு வருட காலமாக மாணவர்கள் தண்ணீர் குடிக்க வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் போது தண்ணீர் மணி என அடிக்கப்படுகிறது.
தண்ணீர் மணி அடிக்கும் போது அனைவரும் கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும்.இதனால் தினமும் 2 லிட்டர் வரை மாணவர்கள் தண்ணீர் குடிக்கின்றன. சராசரியாக மனிதன் 2லிருந்து 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம்.
இவ்வாறாக குடிக்கும் போது நம் உடலில் தினமும் உண்டாகும் கழிவுகளை சிறுநீர், வியர்வை மூலம் நீக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க, சிறுநீர்க் குழாய்களை கழுவி விட்டு அவற்றில் கிருமிகள், கசடுகள், கற்களின் முன்னோடியான படிகங்கள் சேராமல் இருக்க என்று பல நல்ல விதமானவற்றை இந்த தண்ணீர் மட்டுமே போக்குகிறது.

Advertisement

கருங்குளம் அரசுப் பள்ளி ஆசிரியர் செந்தில் குமார் அவர்களிடம் பேசியபோது “கேரளாவில் இதுபோல் ஒரு பள்ளியில் செய்வதை நாங்கள் இங்கு செய்து வருகிறோம்.கிட்னி, ஸ்டோன் போன்றவற்றிற்கு தண்ணீர் மட்டுமே மருந்தாக இருக்கும் என எண்ணி தினமும் இவ்வாறாக செய்து வருகிறோம்.ஒரு வருடங்களை கடந்தும் இன்றும் நடைமுறையில் இதை மாணவர்கள் கடைப்பிடித்து தான் வருகின்றன.
இங்கு படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் இருந்து நல்ல ஆதரவும் பாராட்டும் வந்து கொண்டுதான் உள்ளது. என்றார்.

குழந்தைகள் தினமான இன்று ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களின் நலன் கருதி இது போல் சிறு சிறு முயற்சிகளை எடுத்தால் குழந்தைகளின் வருங்கால வாழ்க்கை வளமானதாக இருக்கும்‌.