கோடை காலத்துக்கு உகந்த ஆடைகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது...?

கோடை காலத்துக்கு உகந்த ஆடைகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது...?

கோடை வெயிலின் தாக்கம் எப்போதும் இல்லாததை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை வெயிலை சமாளிக்க முதலில் ஆடைகளுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும். சரியான ஆடையை தேர்ந்தெடுத்து அணிவதால் குளிர்ச்சியாக உணர்வதுடன் பார்க்கவும் நன்றாக இருக்கும்.

ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. சீசனுக்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது நம் மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும். கோடையில் காட்டன் ஆடைகள் அணிவது உடலையும் உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும். கோடைக்கு ஏற்ற உடையாக பெண்களால் அதிகமாக விரும்பப்படுவதும் பருத்திப் புடவைகள்தான். கோடைக்காலத்தில், காட்டன் புடவைகளானது கட்டுவதற்கு மட்டுமில்லை, உடல் அளவிலும் நமக்கு பல நன்மைகளை அளிக்கிறது. அதாவது பருத்திப் புடவை ஈரப்பதத்தை தற்காத்துக் கொள்ளும் தன்மைப் பெற்றது.

கோடையினால் நம் உடலில் வெளியேறும் வியர்வையை பருத்தித் துணி உறிஞ்சக் கூடிய தன்மைப் பெற்றது. பின் வெயிலின் தாக்கத்தால் உடனே அதை வெளியேற்றும். அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த நாட்களில், பகல் வேளையில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. வெளியில் சென்றாலும், வீட்டிற்குள் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் நம்மை வாட்டிக்கொண்டுதான் இருக்கும். இப்படியான சூழலில், நாம் அணியும் ஆடைகள் மூலம் சிறிதளவு குளிர்ச்சியை உணர முடியும். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து சருமத்தை காப்பதில், ஆடைகளின் வகை மற்றும் வண்ணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கோடையில் வெளிர் நிற ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

இது உடலின் வெப்பத்தை எளிதில் வெளியேற்றும். வெளிப்புற வெப்பத்தை, உடல் அதிகமாக உட்கிரகிக்காமல் தடுக்கும். இதனால் உடலின் இயல்பான குளுமையை நம்மால் தக்கவைத்துக் கொள்ள முடியும். வெளிர் நிற ஆடைகள் கண்களுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன், வெப்பத்தால் ஏற்படும் எரிச்சலை நீக்கும். வெளிர் நிற சருமம் கொண்டவர்கள், பேஸ்டல் நிறங்களின் கலவையான டார்க்காய்ஸ், கேண்டி பிங்க், லெமன் யெல்லோ மற்றும் பெய்ஜ் போன்ற வண்ணங்கள் கொண்ட பருத்தி ஆடைகளை உடுத்துவது நல்லது. அடர் நிற சருமத்தினர், வெளிர் நிறங்களான இளஞ்சிவப்பு, லாவண்டர் புளூ, காட்டன் கேண்டி பேபி புளூ, இளந்தளிர் பச்சை, கிரீம் யெல்லோ, லிப்லாஸ் பிங்க், இளநீர் வெள்ளை மற்றும் டால்பின் கிரே போன்ற நிறங்களில் ஆடைகள் அணியலாம். தவிர, பருத்தி, லினன், ராயன், டிமின் போன்ற ஆடை வகைகளை கோடையில் பயன்படுத்தலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision