நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி? திருச்சியில் பயிற்சி வகுப்பு:

நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி? திருச்சியில் பயிற்சி வகுப்பு:

திருச்சி மண்ணச்சநல்லூரில் நேர்முக தேர்வை எதிர்கொள்வது எப்படி என்கின்ற மூன்று நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் எம்பிஏ, இன்ஜினியரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஆகிய மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.

இன்றைய சூழலில் பாடத்தைப் பற்றிய போதிய அறிவு இருந்தபோதிலும் நேர்முகத் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கத்தாளும் ஒருவித பயத்தினாலும் நேர்முகத்தேர்வில் கோட்டை விட்டு விடுகின்றன. இதனை போக்கவே இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் நமது திருச்சியில் நடைபெற்றது.

Advertisement

இந்த நேர்முக பயிற்சித் தேர்வில் எப்படியெல்லாம் ஒரு நேர்முகத் தேர்வை அணுகலாம்! எப்படி நம்மை தயார்படுத்திக் கொள்வது! அங்கு சென்றால் நான் எப்படி பேசலாம், இருக்கலாம்! அதற்கு உரிய பண்புகளை நாம் எப்படி வளர்த்துக்கொள்வது போன்றவற்றுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

மாணவர்கள் சிறப்பாக பங்கேற்று தங்களுடைய நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டனர். பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனத் தலைவர் கணேசன், ஜென்னிஸ் அகாடமி இயக்குனர் பொன்இளங்கோ, சங்கம் ஹோட்டல் குழு மேலாளர் ரவிப்பிள்ளை, ஜென்னிஸ் துணைமுதல்வர் மோகன்குமார், துவாக்குடி கேட்டரிங் கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.