திருச்சி புனித சிலுவை கல்லூரி புத்தாக்கம் மற்றும் பாதுகாப்பு மையம் திறப்பு விழா
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் புத்தாக்கம் மற்றும் பாதுகாப்பு மையத்தின் திறப்பு விழாவானது இன்று தொடங்கியது. பேராசிரியர் முனைவர் ஜூலியட் கேத்ரின் ஏஞ்சல் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் நூற்றாண்டு விழாவினை மையமாகக் கொண்டு 100 புத்தொழில்களை 54 மாணவியர்களும், 12 பேராசிரியர்களும் இணைந்து மாற்றத்தை உருவாக்கி, காப்புரிமை என்னும் தங்கள் திறனின் மூலமாக புத்தொழில்களை படைத்துள்ளனர். இளம்பெண்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்குவதே இம்மையத்தின் நோக்கமாகும். தொழில்நுட்பம் தொடர்பாகத் தங்களின் முன்மாதிரிகளையும், கருத்துக்களையும் வழங்கி விழாவினைச் சிறப்புச் செய்தனர்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி கிறிஸ்டினா பிரிஜிட் தலைமையில், கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி ஆனி சேவியர் முன்னிலையில். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகிய டாக்டர். இனிகோ எஸ். இருதயராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மையத்தினை திறந்து வைத்தார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக, திருச்சியின் இளம் இந்தியர்கள் தலைவர் பி.அசோக் இராமனாதன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பொருளாதாரத் துறைத்தலைவர் இணைப்பேராசிரியர், தொழில் முனைவோர் கண்டுபிடிப்பு தொழில் மையத்தின் இயக்குநர் டாக்டர் என்.பிரசன்னா, மற்றும் கல்வித்துறை ஆலோசகர் தமிழ்நாடு நான் முதல்வன் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் உறுப்பினருமாகிய எஸ்.பி இயேசுராஜா கலந்து கொண்டு விழாவில் சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் மோரிஸ் பிரின்ஸி நன்றியுரை வழங்க விழா நிறைவுபெற்றது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn