ஜெயக்குமார் வாயையும், ஒன்றரை கோடி தொண்டர்களின் வாயை மூட முடியாது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சியில் பேட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தொண்டரை தாக்கியது உள்ளிட்ட 3 வழக்குகளில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமின் பெற்று வெளியே வந்தார். திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திங்கள், புதன், வெள்ளி மூன்று நாட்கள் (நிபந்தனை ஜாமினால்) திருச்சியில் தங்கி இருந்து கையெழுத்திட வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இன்று கண்டோன்மென்ட் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அகிலா முரளிதரன் முன்னிலையில் இரண்டாவது நாளாக ஜெயக்குமார் கையெழுத்திட்டார். முன்னாள் அமைச்சர்கள் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் காவல் நிலையத்துக்கு முன்பு கூடியிருந்த கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்... திமுக தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் மீதும் கழக முன்னோடிகள் மீதும் வழக்குகள் தொடர்ந்து மிரட்டி பார்க்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாமல் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குகளை போட்டு பணம், நகை ஏதும் சல்லி காசு கூட கைப்பற்றாமல் அதை கைப்பற்றியதாக குறிப்பிடுவது பொய் என குற்றம்சாட்டினார்.
ஜாமினில் வெளிவந்த ஜெயக்குமார் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருவதாக திமுக ஆர். எஸ். பாரதி குறிப்பிட்டதற்கு நீதிமன்ற உத்தரவுபடி திருச்சியில் தங்கி இருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திடுகிறேன். நான் பேட்டி கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை ஜெயக்குமார் வாய மூட முடியாது. ஒன்றரை கோடி தொண்டர்களின் வாயை மூடமுடியாது.
இந்தியாவின் சிறந்த முதல்வர் ஸ்டாலின் என குறிப்பிடுகிறார்களே என்பதற்கு இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக் என குறிப்பிட்டார். திமுகவை கெளரவர்கள் ஆட்சி என்றும் அதிமுக பாண்டவர்கள் ஆட்சி பாராளுமன்றத் தேர்தலும் சட்டமன்ற தொகுதி அதிமுக மீண்டும் வெற்றி பெற்று விரைவில் வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO