“என்னுள் கலாம்" - அறிவியல் கண்காட்சி விழா
திருச்சி மாவட்டம் மணப்பாறை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் (06.01.2025) மற்றும் (07.01.2025) ஆகிய இரண்டு நாட்கள் "என்னுள் கலாம்" என்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் 20 அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் (மழலையர் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை) மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் 610க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான புதிய புதிய அறிவியல் படைப்புகளை சமர்பித்தார்கள் அவற்றில் சமாரியா மேல் நிலைப் பள்ளியின் 9- ஆம் வகுப்பு மாணவர் செல்வன்.கணேஷ் முதல் பரிசாக வெற்றி கோப்பை மற்றும் பணப்பரிசினைப் பெற்றார்.
இந்த நிகழ்வில் திருச்சி அண்ணா கோளரங்கத்தின் திட்ட இயக்குனர் R.அகிலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடையே அறிவியல் சிந்தனைகளை எவ்வாறு புகுத்துவது, மேலும் அறிவியல் படைப்புகளை எவ்வாறு நடைமுறை பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்வது என விளக்கம் அளித்தார்.
இதனை தொடர்ந்து வகுப்பு வாரியாக மூன்று அறிவியல் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பதக்கங்களும் பரிசுக் கோப்பைகளுடன் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தார்.
இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் ARK. அரவிந்த் தலைமையில் பள்ளி முதல்வர் சித்ரா பழனிசாமி மற்றும் கார்த்திகேயா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் S.அருள் முன்னிலையில் அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்களுடன் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision