சாட்டை துரைமுருகன் கைப்பையில் கத்தி திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது - பரபரப்பு

சாட்டை துரைமுருகன் கைப்பையில் கத்தி திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது - பரபரப்பு

திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக சீமான் வந்து மீண்டும் சாட்டை துரைமுருகனுடன் இருவரும் திருச்சி விமான நிலையத்திலிருந்து மதியம் சென்னை சென்றனர். அப்போது சாட்டை துரைமுருகன் கைப்பையை சோதனை செய்த போது கைப்பையில் சிறிய ரக 1.5இன்ச் நீள கத்தி பட்டன் ரகம். அதில் பல்வேறு விதம் நகத்தை கட் செய்வது உள்ளிட்ட பலவகைகள் பட்டன் மூலம் திறப்பது இருந்துள்ளது. 

காயம் ஏற்படுத்தக்கூடியபொருளை விமானத்தில் பயணம் செய்யும் பொழுது கைப்பையில் எடுத்து செல்லக்கூடாது. நீங்கள் கைப்பையில் வைத்து உள்ளீர்கள் என்று சோதனை தெரிந்தவுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கேள்வி எழுப்பிய பொழுது

வெளியே பிரபு என்பவரிடம் கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு சாட்டை துரைமுருகன், சீமானும் விமானத்தில் பயணம் செய்து சென்னை சென்றடைந்தனர்.திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்து வழக்கில் சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி மீண்டும் சென்னை செல்லும் பொழுது சாட்டை

துரை முருகன் கைப்பையில் சிறிய ரக கத்தி சிக்கிய விவகாரம் மாநகர காவல் துறை மற்றும் அனைவரின் மத்தியில் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. இவ்வளவு நாள் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் சாட்டை துரைமுகனுக்கு இது போன்ற பொருட்களை எடுத்து செல்லக்கூடாது

என்பது நன்றாகவே தெரிந்திருக்கும் எப்படி இவர் எடுத்துச் சென்றார் என காவல் உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision