தமிழக ஆளுநர் குறித்த தீர்ப்பு காலமெல்லாம் கொண்டாடும்படி அமைந்துள்ளது- கே.எம்.காதர் மொகிதீன்

தமிழக ஆளுநர்  குறித்த  தீர்ப்பு  காலமெல்லாம் கொண்டாடும்படி அமைந்துள்ளது- கே.எம்.காதர் மொகிதீன்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் காலமெல்லாம் கொண்டாடும்படி அமைந்துள்ளது இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் காலமெல்லாம் கொண்டாடும்படி அமைந்துள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2025 ஏப்ரல் 8 செவ்வாய்க் கிழமை இந்திய உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் ஆளுநர் பற்றிய தீர்ப்பு, உச்சியில் வைத்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் காலமெல்லாம் கொண்டாடும்படியான அதி அற்புத தீர்ப்பாகிவிட்டது.

திராவிட மாடல் நல்லாட்சி நடத்திவரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் எதையும் எப்போதும் என்றென்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆதரிப்பதும் எதிர்ப்பதும் ஒத்துப்போவதும் வேறுபட்டு நிற்பதும் தனது அரசியல் வாழ்க்கையாகக் கொண்டு, நாடும்

ஏடும் நானிலமும் ஏற்றுப்போற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார். இன்றைய அரசியல் தலைவர்களுக்கெல்லாம் எழிலார்ந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வருகிறார்.தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி விவகாரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து பின்பற்றி வந்த பொறுமை மிகுந்த பொன்னான சட்ட வழிமுறை இன்றைக்கு இந்தியா முழுவதும் பாராட்டுபடியானதொரு அணுகுமுறை என்பதை நிரூபித்திருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டவிதி 200 கூறுவது இதுதான். மாநில சட்டப்பேரவை எடுக்கும் முடிவுகளை - மசோதாகளை - முன் வடிவுகளை, ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பும்போது, ஆளுநர் ஒப்புதல் அளிக்கவோ, அதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவோ, அல்லது திருப்பி அனுப்பவோ செய்வதற்குரிய காலக்கெடு கூடிய விரைவு என்று விதித்திருக்கிறது. என்று தெரிவித்திருந்தார் 

 திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision