கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் நான்கு பேர் கைது

கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் நான்கு பேர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரியமங்கலம் அம்மாக்குளம் பாரதியார் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் பொன்ராஜ் என்பவரின் மனைவியுடன் அரியமங்கலம் முல்லை தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் நிஷாந்த் என்கின்ற பன்னீர்செல்வம் அடிக்கடி பேசி வருவதை சுந்தர்ராஜன் தந்தை பொன்ராஜ் கண்டித்ததாகவும்

இதனால் நிஷாந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு நபர்களுடன் சேர்ந்து பொன்ராஜை கொலை செய்தது சம்பந்தமாக திருவரம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்கின் ஐந்து நபர்களும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட தற்போது

சிறையில் இருந்து வருகின்றனர் இந்நிலையில் நிஷாந்த் என்பவர் மீது கடந்த 28/03/2025-ம் தேதி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பிரசன்னா மகேந்திரன் குணசேகரன் ரங்கராஜ் ஆகியோர் மீதும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செ. செல்வரத்தினம் அவர்கள் பரிந்துரைத்து பெயரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் மேற்படி

எதிரிகள் மீது தடுப்பு காவல் ஆணைய பிறப்பிக்கப்பட்ட இன்று 8 /04/2025ஆம் தேதி சிறையில் உள்ள சார்பு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2025 முதல் இறுதி வரை மொத்தம் 18 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision