திருச்சி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றியோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!
திருச்சி மாவட்டத்தில் 40 சதவிகிதத்திற்கு மேல் மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் 75 சதவீத மேல் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாதாந்திர பராமரிப்பு தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 40 சதவீதத்திற்கு மேல் மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் 75 சதவீதத்துக்கு மேல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மாதாந்திர சேமிப்புத் தொகை ரூபாய் 1500 வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாதாந்திர பராமரிப்பு தொகை பெறப்படாதவராக இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், உணவு பொருள் வழங்கல் அட்டை, ஆதார் அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டை நகலுடன் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு பின்புறம் உள்ள மாற்றுத் திறனாளிகள் பல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS