கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் 95 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது-முதல்வர் நேரு பேட்டி

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் 95 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது-முதல்வர் நேரு பேட்டி

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முன்னாள் டீன் வனிதா கடந்த மாதம் ஓய்வு பெற்றார். தொடர்ந்து புதிதாக மருத்துவர். நேரு மருத்துவமனை முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். அவரை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்தும் பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்... திருச்சி அரசு மருத்துவமனையில் 1603 படுக்கைகள் உள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறியவர்களுக்கு 20, பெரியவர்களுக்கு 75 என மொத்தம் 95 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 6 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேர் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் பெறப்பட்ட சிறுநீரகம், 3 பேர் தானமாக வழங்கிய சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு திட்டங்கள் பொது மக்களுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக மகத்தான மருத்துவமனை, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மருத்துவமனைக்கு ஒதுக்கப்படும் நிதியை கொண்டு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 #திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO