மனைவியை குழவிக்கல்லால் தாக்கி கொன்றவர்க்கு ஆயுள் தண்டனை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் உப்பிலியப்பபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோணக்கரை கிராமத்தில் கடந்த (1.06.2024)ஆம் தேதி சிவக்குமார் என்பவர் தனது மனைவி செங்கொடி என்பவரை
நடத்தையில் சந்தேகப்பட்டு குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்தது சம்பந்தமாக இறந்தவரின் மகன் சங்கேஸ்வரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவக்குமார் மீது உப்பிலியப்பபுரம் காவல் நிலைய வழக்கு பதிவு செய்து வந்தனர்.
விசாரணை திருச்சி மாவட்டம் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று (28 03.2025 )அரசு தரப்பு வழக்கறிஞரான சவரிமுத்து ஆஜராகி வாதிட்ட நிலையில் திருச்சி முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் அவர்கள் வழக்கின் ஆயுள் தண்டனையும்
ரூபாய் 1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆளிநர்களையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செ. செல்வரத்தினம் அவர்கள் பாராட்டினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision