ரோந்து பணிக்காக இருசக்கர வாகனங்கள் - திருச்சி மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

ரோந்து பணிக்காக இருசக்கர வாகனங்கள் - திருச்சி மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

தமிழகக் காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் படி தமிழக அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் ரோந்து செய்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக 10 இருசக்கர வாகனங்கள் திருச்சி மாநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டது.

இன்று( 28.03.2025)-ஆம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர்  நா.காமினி அவர்கள் திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் இருந்து இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியின் போது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மேற்கண்ட இருசக்கர வாகனங்கள் மத்திய பேருந்து நிலையம் ரயில் நிலையம் சத்திரம் பேருந்து நிலையம்

காவேரி பாலம், கொள்ளிடம் பாலம், ஆகிய பகுதிகளில் ரோந்து செய்து குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் அவசர எண் 100க்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அழைப்புகளுக்கு சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று சட்டரீதியான துரித நடவடிக்கை மேற்கொள்ளவும்

திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாக்க இந்த இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision